♫musicjinni

நெருப்பு கண்களுடன் சூர்யா.. எதற்கும் துணிந்தவன் கொல மாஸ் போஸ்டர் | Cinemapettai

video thumbnail
சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய ஜெய்பீம் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்து வந்தது. மேலும் முதல் முதலாக பாண்டிராஜ் சூர்யா கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெய்பீம் படத்தை தியேட்டரில் வெளியிடாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட்ட தியேட்டர்காரர்கள் பலரும் சூர்யா மீது அதிருப்தி கொண்டு இனிமேல் சூர்யா நடிக்கும் படங்களை தியேட்டர்களில் வெளியிட மாட்டோம் என ஒரு பிரச்சனையை கிளப்பி வைத்துள்ளனர். ஆனால் அதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி உலகமெங்கும் ஐந்து மொழிகளில் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகிறது என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தற்போது தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களையும் ஒரே நேரத்தில் தயாரித்து வருவதால் எப்படியும் தியேட்டர்காரர்கள் இதற்கு முட்டுக்கட்டை கூட வாய்ப்பில்லை. அப்படியே போட்டாலும் தியேட்டர்காரர்களுக்கு தான் நஷ்டம் என்பது தெரிந்ததுதானே.

இதனால்தான் தியேட்டர்காரர்கள் விஷயத்தில் அதிகம் சூர்யா வாய் விடாமல் இருந்தார் என்கிறார்கள் அவரது வட்டாரங்கள். சூர்யா நடிப்பில் ஒரு மாஸ் படம் பார்த்து நீண்ட நாள் ஆகிவிட்டது என்பதை கண்டிப்பாக எதற்கும் துணிந்தவன் படம் தீர்த்து விடும் என்பது போஸ்டர்களை பார்க்கையிலேயே தெரிகிறது.

ஐந்து மொழிகளில் வெளியாகும் எதற்கும் துணிந்தவன் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி சூர்யா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. கண்டிப்பாக சூர்யாவின் இந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என இப்போதே கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழ ஆரம்பித்துள்ளன. மேலும் எதற்கும் துணிந்தவன் படத்தின் கதை பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானது என்ற ஒரு பரவலான தகவலும் இருக்கிறது.

starts: 0:00
second: 0:06
mid: 1:04
end: 2:00


மேலும் செய்திகளுக்கு: https://www.youtube.com/channel/UCe6rihes8pZgJqGKpKUsNJQ/?sub_confirmation

#Cinemapettai #Surya #Jaibhem #EtharkumThuninthavan#MynaNandhini #SarathRithika


#Cinemapettaivideos #Cinemapettainstavideos #Cinemapettainews #Viralvideos #Celebrityvideos

Follow us on:
Whatsapp: https://chat.whatsapp.com/CfbuaEIYhVYF2ooXpFDZaR

Telegram: https://t.me/CinemapettaiMedia
Disclaimer DMCA