♫musicjinni

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை

video thumbnail
படம் : அன்னை
பாடியவர் : சந்திரபாபு
பாடல் வரிகள் : கண்ணதாசன்
இசை : R சுதர்சனம்

புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை… புத்திசாலியில்லை
புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை… புத்திசாலியில்லை

பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணமில்லாத மனிதருக்கு சொந்தமெல்லம் துன்பம்

புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை… புத்திசாலியில்லை

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை
மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை… புத்திசாலியில்லை

கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு
அவன் கனவில் அவள் வருவாள் அவனை பார்த்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவார் யாரை பார்த்து அழைப்பாள்?

புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை… புத்திசாலியில்லை

பாரதிக்கு கண்ணம்மா - பிரியமுடன்(1998) | Vijay | Gousalya | Deva

தாயறியாத தாமரையே- Arangetravelai(1990) Prabu | Revathi | VKRamasamy | Ilayaraja | Mano,S.P.Shailaja

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை

Naan Oru Sindhu - Sindhu Bhairavi 1985 | Ilaiyaraaja | Vairamuthu | K S Chitra

Vizhiyil Vizhundu - அலைகள் ஓய்வதில்லை(1981) | இளையராஜா | சுனந்தா | வைரமுத்து

எனைக் காணவில்லையே - காதல் தேசம் (1996) Abbas | Vineeth | Tabu | A.R.Rahman

காகித ஓடம் கடல் அலை மீது... - மறக்க முடியுமா ?

Janaki Devi Ramanai Thedi - Samsaram Athu Minsaram Visu | Dilip | Ilavarasi | K.S.Chithra |

காதல் கிளியே... - ஜல்லிக்கட்டு | சிவாஜி கணேசன் | சத்யராஜ் | ராதா | இளையராஜா

Disclaimer DMCA