♫musicjinni

எங்கே எனது கவிதை - Kandukondain Kandukondain (2000) |Ajith Kumar | Aishwarya Rai | Abbas | Tabu

video thumbnail
படம் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

பாடியவர்கள் : K.S. சித்ரா, ஸ்ரீநிவாஸ்
இசை :A.R. ரஹ்மான்
பாடல் வரி : வைரமுத்து

பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை (2)
விழியில் கரைந்துவிட்டதா அம்மம்மா
விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள் இல்லை என்
கனவை மீட்டுத் தாருங்கள்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை (2)

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்
தொலைந்த முகத்தை மனம் தேடுதே
வெயில் தாரொழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலர் வாடுதே

மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை
உருகி உருகி மனம் தேடுதே

அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்
அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை
தீண்டு நூறு முறை பிறந்திருப்பேன்

பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை (2)

ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட
ஒரே தொடுதல் மனம் வேண்டுதே
முத்தம் போடு ம் அந்த மூச்சின் வெப்பம் அது
நித்தம் வேண்டும் என்று வேண்டுதே

வேர்வை பூத்த உந்த சட்டை வாசம்
இன்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே
கேட்குதே...

பாறையில் செய்தது என் மனம் என்று
தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

Naan Oru Sindhu - Sindhu Bhairavi 1985 | Ilaiyaraaja | Vairamuthu | K S Chitra

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை

எங்கே எனது கவிதை - Kandukondain Kandukondain (2000) |Ajith Kumar | Aishwarya Rai | Abbas | Tabu

Disclaimer DMCA